Jun 16, 2011

நினைவுகள்




முன்பு
நினைவுகளை அசைபோட
கண்ணை மூடி பின்னோக்கிப் பயணம்
மேகம் போல மனத்திரையில்
நின்று ருசிக்க முடியாமல்
தெளிவாய் ரசிக்க முடியாமல்
வெண்புகை போலே மறையும்

இன்று
நினைவுகளை அசைபோட
கண்ணாடித் திரையில் பின்னோக்கிப் பயணம்
இணையத்தின் மேகங்கள் கண்ணெதிரில்
நின்று ஆற அமர ருசிக்க வைத்து
மறந்தவையும் மூலையில் தட்டி எழுப்பி
ஏக்கத்தை உண்டாக்கி மறைகிறதே

நானா இதெல்லாம் செய்தேன்
நீயா இதெல்லாம் சொன்னாய்
எங்கு சேர்த்தது காலம் நம்மை
அந்த நாட்கள் மீண்டும் வாராதா
நாம் கண்ட கனா இன்றே நனவாகாதா




Munbu
ninaivugalai asaipOda
kaNNAI moodi pinnOkkip payaNam
megam pOla manaththiraiyil
ninRu rusikka mudiyaamal
thelivai rasikka mudiyaamal
veNpugai poley maraiyum

Indru

Ninaivugalai asaipOda
kaNNAdith thiraiyil pinnOkkip payaNam
iNaiyaththin megangal kaNNethiril
ninRu aara amara rusikka vaithu
maranthavaiyum moolaiyil thatti yezhuppi
Ekkathai uNdaakki maRakiRathE

NAna ithellaam seithEn
neeya ithellaam sonnAi
engu sErththadhu kaalam nammai
andha naatkaL meendum vArAthA
nAm kaNda kanA inRE nanavAkAthA

2 comments:

Anonymous said...

Very nice.. Vry true.. Am sure each one of us wud feel this many times in life:). Anitha

Raju said...

Anitha, am happy you liked it. Thanks. :)