Jul 28, 2005

பிரிய சகி

Pic adopted from Nowrunning


பணக்கார நாயகி.. நடுத்தர வர்க்க நாயகன்.. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கிடையே நடக்கும் கருத்து வேறுபாடுகள் எப்படி பெரிதாக்கப்படுகின்றன என்ற புராண காலத்துக் கதையை அதியமான் மீண்டும் அரைத்திருக்கிறார். பழைய கள்ளை புதிய மொந்தையில் சரிவரக் கொடுக்கும் வித்தை எல்லாராலும் முடியுமா என்பதற்கு அவர் ஒரு சரியான உதாரணம்...

படத்தின் மிகப் பெரிய பலவீனம் கதை-திரைக்கதைதான்.. படம் ஆரம்பித்து அவசர கதியில் சகியும் (சந்தானகிருஷ்ணனின் சுருக்கப் பெயராம் - மாதவன்) பிரியாவும் (சதா) காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ளும்போதே தெரிந்துவிடுகிறது.. என்ன என்ன நடக்கப் போகிறது என்பது.. சதாவின் கர்ப்பமும் அதன் பின்னர் வரும் சில நிமிடக் காட்சிகளும் கொஞ்சம் யூகிக்கமுடியாதவையாக இருந்தாலும் அதன் பிறகு இறுதிக்காட்சி வரை எல்லாம் எதிர்பார்த்தபடியே போகின்றன.. சகி எல்லாருக்கும் முன்னிலையில் பிரியாவை அறைவான் என்று நினைக்கும்போது, சதா பிரிந்து நடக்கும்போது குழந்தை அழும் என்று நினைக்கும்போது, அப்பாவி கணவன் க்ளைமாக்ஸில் மனைவிக்கு ஒரு அறை கொடுத்து அடக்குவார் என்று நினைப்பதெல்லாம் நடக்கிறது.. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஆர்வம் ஏதும் இல்லை என்று பாடத் (அழத்) தோன்றுகிறது..

இருந்தாலும், கணவன் - மனைவி சண்டையில் மாமியாரையோ நாத்தனாரையோ கொண்டு வராததில் ஒரு சின்ன ஆறுதல்.. இல்லையென்றால் மெகா சீரியல் போல ஆகியிருக்கும்.. பிரியாவும் சகியும் சண்டை போட்டுக்கொள்வதற்கான காரணங்கள் எல்லார் வீட்டிலும் நடப்பதுதான். கண்டதும் காதல் கொண்டு பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் வருவதால் வரும் பிரச்சினைகளை அதியமான் நன்கு சொல்லியிருக்கிறார். காதலிக்கும்போது பெண்களின் உணர்வுகளை நன்றாக அறிந்து தான் விரும்பும் பெண்ணைத் தன்னை விரும்புமாறு செய்யும் சகி, கல்யாணத்துக்குப் பிறகு எல்லாமே தத்துப்பித்துத் தனமான காரியங்களை செய்து வாங்கிக் கட்டிக்கொள்வது உதைக்கிறதே.. கோர்ட் காட்சி வரை இயக்கிப் பார்த்து போர்-அடித்துப் போய் வேறு யாரோ ஒருவரை இயக்கச் செய்ததுபோல கதை எங்கெங்கோ ஜவ்வாகப் பயணிக்கிறது.. இப்படி ஒரு தீர்ப்பும், கோவை சரளா வீட்டோடு தங்கி ரகளை பண்ணுவதும் எந்த மரத்தினடியில் அமர்ந்து சிந்திக்கும்போது அதியமானுக்குக் கிடைத்ததோ..

மாதவனும் சதாவும் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்கள்.. மாதவனாவது கல்யாணம் ஆனவர்.. மனைவியுடன் சண்டை போடும் காட்சியில் நடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருந்திராது.. ஆனால் சதா போன்ற இளம் நடிகை முன்கோபம் கொண்ட மனைவி பாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருப்பதற்கு ஒரு சபாஷ் போடலாம். மாதவ்னும் தன் கோபத்தை அடக்கிக்கொள்ளும் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார்.. ஐஸ்வர்யா அம்மா வேடத்திலா? சுத்தமாகப் பொருந்தவில்லை.. கோவை சரளா எரிச்சலூட்டுகிறார்.. ரேகா, சீதா, ராஜலக்ஷ்மி, சச்சு, பிரதாப் போத்தன் போன்றோர் ஓரிரு காட்சிகளுக்காக மட்டும் வந்து போகிறார்கள்..

மாதவனின் அவ்வளவு பெரிய வீட்டில் ஒரே ஒரு TV மட்டும் ஏன்? ஐஸ்வர்யாவும் பிரதாப்பும் என்ன தொழில் செய்து அவ்வளவு பணக்காரர்களாக இருக்கிறார்கள்? கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆனபிறகு விவாகரத்து செய்யமுடியும்.. விவாகரத்து வழக்கு தீர்ப்பு வரும் நாளிலிருந்து ஒரு வருஷம் ஆகவேண்டும் என்று அதியமான் தன் வசதிக்கு சட்டத்தை மாற்றியிருக்கிறார்.. குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி முன்கூட்டியே பேசிக்கொள்ளாத அளவுக்கு மக்குகளா இருவரும்? ஒரு டைரி விவகாரம் பூதாகாரமாக உருவெருப்பதும் அப்படித்தான்.. கணவன் - மனைவி இருவருக்கும் நடக்கும் விவகாரங்களில் மாதவன் மீது அதிக தப்பு இருப்பதாகக் காட்டிவிட்டு பின் பாதியில் ஒரு பெண் என்றும் தாய் என்றும் இருப்பதற்காக சதாதான் இறங்கி வருவதாகக் காட்டியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.. கடைசிக் காட்சியில் அம்போவென்று நடு ரோட்டில் நிற்கிறார்..

மருந்துக்குக் கூட காமெடி இல்லாதது ஒரு குறை.. பரத்வாஜ் இனிமையான இசையில் காதுக்கு இரைச்சலில்லாமல் பாடல்கள் கொடுத்திருக்கிறார்.. ஆனால் எல்லாமே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கின்றன.. மொத்ததில் படம் பெண்களுக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் பிடிக்கும்.. மெகா சீரியல்களில் கட்டுண்டவர்கள் அல்லவா..

மாதவன், சதா நடிப்புக்காக B- கிரேடு கொடுக்கிறேன்.


15 comments:

tt_giant said...

Nice review.. indha sappa padamellam release aaguthu.. anniyan release panna maataanga..

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஆர்வம் ஏதும் இல்லை

liked this sentence a lot.

Wonder why maddy chose this movie after such a long gap.

GP said...

Thanks, Deepak..

What choice does Madhavan have? He is kinda branded as 'not-hot', since he didnt give any hits for almost 3 years now.. Looks like the movie is doing good business.. So, it might recover its costs and may even become a semi-hit..

keerthi said...

this is inspired by Alaipayuthey..

im getting to hate sadha..:(

ada-paavi!!!! said...

movie romba kevalama irukku, padatha pathu vazhkaia veruthutean

Me too said...

Nice review! Haven't read a tamil review since Anandha vikatan went subscription.

Balaji said...

gp, great review. as u mentioned, it looks like we felt the same way about the movie, especially the silly comedy after the court scene.

GP said...

Keerthi.. yes.. Alaipayuthey and 'Chalte Chalte' from the recent crop and quite a few ones before '90

Vatsan, vazhkkaiyai mattum alla sila samayam penngalaiyum kooda verukka vaikkalam..

Archana and Balaji,Thanks.. I could barely sit and watch the post-court scenes.. thaanga mudiyalai, saami..

Nitin said...

I really didn't like this movie, i am guessing this movie probably did some good business due to Sada. Maddy gets really irritating at times. I hear he is acting next in a bigbudget hindi movie with Siddharth (who acted in boys, and ayutha ezhuthu).

Nitin said...

first matche India uthikichu. dravid, good effort. Jayasuriya, still one of the best.

GP said...

Yes Nitin, for both ur comments..

I think this series is gonna be more of a trial-and-error for India.. Finding out the strengths and weaknesses of the current squad and the bench strength..

Ram.C said...

I read somewhere that Sada was 'sodha' again.. But your final line is somewhat different

Raju said...

Sada was sodha in terms of looks.. but, her performance as wife was good.. As I mentioned in the 4th para, if you replace her face with your wife's during a hot argument, you will see that she is spot on.. Since you are married, I am telling you this.. I felt that way.. :-)

i,me,my music said...

GP,
reading ur TAMIL movie review post for the first time ..enjoyed it.. For sumtime initially, I was visualising rathna's(thirai vimarasanam,suntv) voice.. Avlo suththa tamizh la kalakirka.. after u started humour, konjam colloquial a aachu..
Madhavanin Thathupithu thanamaana kaariyangal na enna??
Write more in tamil.. Good job..

Raju said...

Ramya, ennadhu GP-ya? En peru Raju-ma..

LOL on the comparison with Rathna.. paavam adhu romba apraniyana ponnu.. sappai padathukkum kooda Oscar range-ku vimarsanam seiva..

Romba naal aachu padam parthu, but Madhavan does some silly things like giving the dress that he bought for his wife to his sister and so on..

Thanks for ur appreciation.. I am glad you liked it.. :)

comprar tablet pc said...

It won't really have effect, I think this way.