Jul 12, 2005

பொழுது போக்குகள்

(Pic adopted from acdsystems)

அவனுக்கு போர் அடித்தது. சரி.. கொஞ்சம் ஏதாவது கடலை போடலாம் என்று யாஹூ மெஸெஞ்சரில் நுழைந்தான். ஒவ்வொரு அறையாக நுழைந்து யாராவது பெண் பேச கிடைப்பாளா என்று தேடினான். அப்போது சொய்ங்... ஒரு பேச்சு அழைப்பு அவனுக்கு வந்தது. பெண் பெயர் 'அழகான இந்திய பெண்- 22'.. ஏதும் விளம்பரமாக இருக்கும் என்று விட்டுவிட்டான். திரும்பவும் ஒரு அழைப்பு.. "ஹேய்.. நான் உன்னோட அறிமுகத்தைப் பார்த்தேன்... நீ பார்க்க அழகாக இருப்பதாகவும் உடற்பயிற்சி செய்து நல்ல உடம்பை வைத்திருப்பதாகவும் அதில் எழுதியிருக்கிறாய்.... எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது.. நானும் அழகாக இருப்பேன்.. உன்னிடம் கேமரா உள்ளதா.." என்று அழைப்பு சொன்னது..

அவனும் "நன்றி.. ஆனால் என்னிடம் இப்போது கேமரா இல்லை.." என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். அவள் மெதுவாக அந்தரங்கமாக பேச ஆரம்பித்தாள். இவனுக்கும் ஜாக்பாட் அடித்தது போல அளவில்லாத மகிழ்ச்சி.. 'ஆஹா.. பழம் நழுவிப் பாலில் விழுந்தது மாதிரியாக அல்லவா இருக்கிறது!' என்று தனது கற்பனைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டான். உற்சாகமாக அந்தரங்க உரையாடல் சென்றுகொண்டிருந்தது.. கிட்டத்தட்ட அரை மணி நேரம் சென்றிருக்கும்.. திடீரென்று ஒரு குறுக்கீடல்.. "ஹேய்... போர் அடிக்குது பா.. டீ போர்டு செல்வோமா?" என்று அவள் கேட்டாள். இவனுக்கோ ஒரே குழப்பம்.. 'அவளுக்கு எப்படி நான் இங்கு இருப்பது தெரியும்.. ஒரு வேளை IP அட்ரஸை எப்படியோ கண்டுபிடித்து நான் இருக்குமிடத்தை கண்டுபிடித்துவிட்டாளோ.. அவளும் இங்குதான் வேலை செய்கிறாளோ.. ஒரு வேளை எனக்குப் பரிச்சயமான பெண்ணாக இருப்பாளோ.. எப்படி அவளை எதிர்கொள்வது..' என்று நொடிப்பொழுதில் நூறு எண்ணங்கள்..

'சரி.. ஒரு பெண்ணே என்னைப் பார்க்கத் தயாராக இருக்கும்போது நான் ஏன் யோசிக்கவேண்டும்' என்று நினைத்த அவன் "நீ புத்திசாலிதான்.. நாம் இருவரும் எப்படி அடையாளம் தெரிந்துகொள்வது?" என்று கேட்டான். அதற்கு பதில் "நாம் இருவரும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.. பேசியிருக்கிறோம்" என்று வந்தது. மீண்டும் குழப்பம்.. கேள்விகள்.. "சரி.. க்ரேட்.. நீ தெரிந்துதான் என்னிடம் பேசியிருக்கிறாய்.. எப்படியோ என்னைப் பற்றியும் மோப்பம் பிடித்துவிட்டாய்.. உன் பெயர் சொல்' என்று கேட்டான். கிடைத்த பதில்: போடா.. நான்தாண்டா அபிஜித்.. உன்னோட ரூம்மேட்..

11 comments:

Ram C said...

'தங்கிலீஷ்'ல பூந்து விளையாடியிருக்கீங்க.... ஆனாலும், இன்றைய நாட்டு (அலுவலக) நடப்பை அப்படியே புட்டு புட்டு வைச்சுட்டிங்க..

Anonymous said...

நன்றி, ராம்.. தங்கிலீஷில் நான் இன்னும் ஒரு அமெச்சூர்.. என்னுடைய இந்த உளறல்களை பொறுத்துக்கொள்வதற்கும் நன்றி..

Balaji said...

good one... wonderfully written in a way that draws us in :)

Anonymous said...

Thanks, Balaji..

tt_giant said...

lol.. nice one.. when i was at ASU, there was this guy who did this kind of role-playing for the entire summer. i am sure he must have driven atleast 2 dozen guys mad/crazy!!

Anonymous said...

Deepak, thanks... It was based on a true incident right in front of me.. :-)

வெங்கி / Venki said...

Came here through Narayanan Sir's blog.
Ha ha ha, that is a good one. Sirikkavum konjam sinthikavum vaithathu. Valzthukkal. You are writing is good. The flow is nice. Good Work. Keep blogging.

Anonymous said...

Thanks again, Venky..

Ramya said...

hey funny one.. u know a similar incident happnd wit me in a browsing centre 8 yrs bac.. one telugu guy was chatting wit me..general talks only ok.. as i had many telugu friends enakku therinja telungellam kezhatti viten.. suddenly he said so lets go for lunch.. i was shocked.. i said get lost,paid n left the browsing centr.. when i was abt to take the vehicle the same chat guy comes and starts introducing.. of shock,anger n fear i said 'u idiot get lost' n flew in my tvs..

Raju said...

Ramya, hmmm... your situation was quite tricky indeed..

www.publicidad.org.es said...

This won't really have success, I believe this way.