புலர்ந்த அந்த காலைப் பொழுதில்
உணவகத்தில் பாலோடு காத்திருக்கையில்
பச்சைப் பசேலென வந்தாள் அந்தப் பைங்கிளி
யாரிவள் மனதைத் தாலாட்டும் பூங்கொடி
சிவந்த உதட்டினிலே அழகான ஒரு புன்னகை
கண்களும் சிரிக்கும் அவள் நான் காணாத ஒரு மேனகை
உணவைப் பார்ப்பதா
அவள் உடையைப் பார்ப்பதா
உணவில் மிளகாயைப் பார்ப்பதா
அவள் கையின் வளையலைப் பார்ப்பதா
அவள் என்னைப் படுத்தும் பாடு அவளுக்குப் புரிகிறதா
இதழோரத்தில் தோன்றி மறையும் குறுநகை எனக்கு ஏதும் சொல்கிறதா
அவள் சூரிதார் அணிந்த விதத்தில் ஒரு நேர்த்தி
அவள் கூந்தல் புரளும் அழகில் ஒரு நேர்த்தி
அவள் உண்ணும் அழகை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம்
பால் அருந்தும் அழகை கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டிருக்கலாம்
இப்படி பெண்களைப் பார்க்கும் ஆண் அல்லவே நான்
இப்படி ஒரு பெண்ணைப் பார்த்திராதவனும் நான்
இதுதான் அவள் தினம் காலை வரும் நேரமா
இதுதான் கதிரவன் பனியை உருக வைக்கும் நேரமா
அவள் என் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்தபோது
ஒரு நொடி நின்று பின் துடித்தது என் மனது
அழகான ராட்சஸி என்று இவளைத்தான் பாடினானோ
அன்றலர்ந்த மலர் போல் இன்று தான் பிறந்தாளோ
இந்த தேவதையின் பெயர் என்னவோ
அவள் பேசும் மொழியென்னவோ
குட்மார்னிங் சொல்லியிருக்கலாமோ
ஹாய் இப்போதாவது சொல்லலாமோ
வார்த்தைகள் வெளி வராமல் தவிக்கின்றனவே
மூளையும் வேலை செய்ய மறுக்கின்றதே
எனக்காகவே இன்று ஸ்லீவ்லெஸ்ஸில் வந்தாளா
இவளுக்காகவே நான் வைகறையில் எழுந்து வந்தேனா
அன்று நான் உண்ட உணவு மறக்க முடியாதது
இன்று வரை அவள் நினைவு மறக்க முடியாதது
5 comments:
இப்போ எனக்கு பேச்சே எழவில்லை....
எங்கேயோ போயிட்டீங்க..
முதல் தமிழ் பதிவிலேயே.
ரொம்ப நாள் சொல்ல முடியாம இப்போ சொல்லிடீங்களோ?? எதுகை மோனை அருமை. வாழ்த்துக்கள்.... தொடருங்கள் மென்மேலும்.
Hey!!!.. nice kavidhai.. looking forward for more.
மிக்க நன்றி, ராம்.. ஆமாம்.. ரொம்ப நாளாக மனசுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தது இன்று வாய்ப்பு கிடைத்ததும் கவிதையாக வெளிவந்துவிட்டது.
Deepak, thanks to u too.
Sumi, thanks a lot..
I believe everybody ought to look at this.
Post a Comment