நேற்று என்னுடைய 'ஹரிஹரன் ஹிட்ஸ்' இசைத்தட்டைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது 'விடுகதையா இந்த வாழ்க்கை' வந்தது..அருமையான பாடல்.. அதில் எனக்கு மிகவும் பிடித்தது....
பசுவினைப் பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்...
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்..
நல்ல ஆழமான வரிகள்.. அற்புதமான தத்துவம்.. என்னுடைய குதர்க்க புத்தி இப்படி மாற்றிப் பார்த்தது...
பாம்பினைப் பசுவென்று சாட்சி சொல்ல முடியும்...
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்..
இப்படிப் பார்த்தால் எதுகை மோனை இன்னும் நன்றாகப் பொருந்துகிறது இல்லையா.. (பாம்பு.. காம்பு)
அதோடு அர்த்தமும் சூழ்நிலையும் மாறிப்போகின்றன.. முன்னர் சொன்ன வரிகள் ஒரு நல்லவன் பழிக்கப்படும்போது பாடப்பட்டால் நான் மாற்றிய வரிகள் ஒரு கெட்டவன் நல்லவனாகச் சித்தரிக்கபடும்போது வரும்..
ஒரு கெட்டவனை (பாம்பை) நல்லவன் (பசு) என்று சாட்சி சொல்லலாம்.. அதைப் பொய்யாக்க யாராவது காம்பிலிருந்து விஷமா கறக்கமுடியும்..
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. கவியரசு அவர்களே.. உங்கள் பணி நீடூழி வாழ்க!!
17 comments:
Exactly...Thats how a researcher's mind works !!Ain't so ??
Btw, 1st time to ur blog thru Mr.Narayanan..
Quite interesting archives !! Keep Blogging !!
நன்றி.. அடேங்கப்பா.. (உங்கள் பெயர் என்னவோ ..?)..
My Name in my blog..Oru visit vaangalen !!
Good one GP. I liked it too.! And thanks for letting me know about you.!
About the swapping of words. When the 2nd one is done....
pammbinai pasuvenru saatchi sonvar silar avar...vishathai...kambilum thadavuvare!
Visited you, Prabhu.. Good one..
Thanks, Narayanan.. Your off-shoot is good too..
ரொம்ப ஆழமாவே சிந்திச்சுட்டீங்க... அருமையான வெளிப்பாடு...
Thanks, Ram..
உங்கள் கற்பனை நன்றாக உள்ளது. அது ஒரு நல்ல உதாரணமாக எனக்கு தோன்றுகிறது. உங்கள் மாற்று சிந்தனைப் புரிந்துக் கொள்வதற்கு சுலபமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதவும்.
Thanks, Venki.. Will visit u sometime today
Munimma.. got ur comment.. actually, paambilirundhu visham edukka mudiyum illaiya?
:-) I was thinking on the karakking lines. I figured it out later on :-}
kalakki podunga.. vaarthai vizhayattu..
Thanks,Deepak..
What a great site large format digital printing hayward ca california phone answering service
To my mind every person have to read it.
Post a Comment